கடலூரில் காமராஜர் சிலைக்கு கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை


கடலூரில் காமராஜர் சிலைக்கு கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 16 July 2020 11:37 AM IST (Updated: 16 July 2020 11:37 AM IST)
t-max-icont-min-icon

காமராஜர் பிறந்தநாளையொட்டி கடலூரில் உள்ள அவரது சிலைக்கு கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

கடலூர்,

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி கடலூர் மஞ்சக்குப்பம் ரவுண்டானா அருகில் உள்ள காமராஜர் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகர தலைவர் வேலுசாமி தலைமையில் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார் வரவேற்றார். பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார், ஓவியர்ரமேஷ், காமராஜ், பார்தீபன், செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சாந்திராஜ், வேலுமணி, வட்டார தலைவர் சீத்தாராமன், இளைஞர் காங்கிரஸ் வேலு, வினுசக்கரவர்த்தி, ஆனந்த்ராஜ், ஊடகபிரிவு மணிகண்டன், அருள்பிரகாஷ், வர்த்தகபிரிவு சிவகுமார், ராஜேந்திரன், முருகன், நகர நிர்வாகிகள் சங்கர், கோபால், மாரிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அதேபோல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன் தலைமையில் துணை தலைவர் பாண்டுரங்கன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கலையரசன், மாநில செயலாளர் ராமதுரைசாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ரஹிம், மீனவர் அணி கடல் கார்த்திகேயன், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் ராமஜ்ராஜ் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட துணை தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் மாவட்ட செய்திதொடர்பாளர் உமாபதி, வக்கீல் அணி தலைவர் கலைச்செல்வன், வட்டார முன்னாள் தலைவர் அன்பழகன், வட்டார முன்னாள் துணை தலைவர் ராஜாராமன், வண்டிப்பாளையம் தாமோதரன், வசந்தராணி, குடிகாடு சுந்தர், ஆனந்த், ஆறுமுகம், ஏழுமலை காட்டுப்பாளையம் ரவி, மங்கலட்சுமி, சேவாதள தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்மாநில காங்கிரஸ்

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் ஞானச்சந்திரன் தலைமையில் மேற்கு மாவட்ட தலைவர் நெடுஞ்செழியன், நகர தலைவர் ரகுபதி, மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் மாநில துணைத் தலைவர் பி.ஆர்.எஸ் வெங்கடேசன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் மாவட்ட பொதுச் செயலாளர் அலமுதங்கவேல், மாவட்ட செயலாளர் சேகர், வட்டார தலைவர் ஜெயக்குமார், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், நகர தலைவர் விஜயன், நிர்வாகிகள் அழகப்பன், வெற்றிவேல், ரஜினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காமராஜர் மக்கள் நலப்பேரவை

காமராஜர் மக்கள் நலப்பேரவை சார்பில் மாநில சட்டஆலோசகர் காமராஜ் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கவுரவதலைவர் முத்துக்குமரனார், வக்கீல் அணி கோட்டீஸ்வரன், மாவட்ட துணை தலைவர் ராஜா, செயலாளர் ஆனந்தன், பொருளாளர் மோகன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். ஆலோசகர்கள் சக்கரை என்கிற சக்திவேல், சதாசிவம், சிவசுப்பிரமணியன், குமாரசாமி, நகர பொருளாளர் சதீஷ், வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், கந்தன், கதிரவன், ரோட்டரி சங்க தலைவர் வீரமணி, வர்த்தக சங்கபிரமுகர் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நாம்தமிழர் கட்சி

நாம்தமிழர் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் சாமிரவி தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். தொகுதிசெயலாளர் பழனி, இணை செயலாளர் செந்தில், நகர செயலாளர்கள் செங்கோலன், சங்கர் வக்கீல்அணி காமராஜ், நகர தலைவர்கள் சுரேந்தர், ரமேஷ், ஒன்றிய செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கடலூர் மாவட்ட நாடார் பேரவை சார்பில் செயலாளர் ராஜவேல் தலைமையிலும், கடலூர் மாவட்ட நடிகர் சிவாஜி பொதுநலப்பேரவை சார்பில் பொதுச்செயலாளர் சிவாஜிகணேசன் தலைமையில் மாவட்ட தலைவர் தர்மராஜ் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில துணை செயலாளர் பாவாணன், நகர ஒருங்கிணைப்பாளர் கிட்டு, மாநில நிர்வாகிகள் முரளி, வக்கீல் சரிதா, தமிழரசன், முகாம் செயலாளர் சோழநம்பி, தொகுதி துணை அமைப்பாளர் ராஜ்குமார், நகர அமைப்பாளர் சலீம் வளவன், அறிவமுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரஜினி மக்கள் மன்றம்

கடலூரில் தெற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமையில் காமராஜர் உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் தண்டபாணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் ரஜனி வேல்முருகன், கடலூர் இனியன், சிவனடியார் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் பிஸ்கட் ஆகியன வழங்கப்பட்டது.

Next Story