கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் மீது பஸ் மோதி 2 பேர் பலி


கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் மீது பஸ் மோதி 2 பேர் பலி
x
தினத்தந்தி 17 July 2020 3:45 AM IST (Updated: 17 July 2020 6:37 AM IST)
t-max-icont-min-icon

பிவண்டி மான்கோலி கிராமம் அருகே கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் மீது பஸ் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.

தானே, 

தானே மாவட்டம் பிவண்டி மான்கோலி கிராமம் அருகே நேற்று முன்தினம் இரவு மும்பையில் இருந்து ஒரு கார் நாசிக் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது நெடுஞ்சாலையில் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி எதிர்புற சாலையில் போய் நின்றது. 

அப்போது அந்த வழியாக வந்த பஸ் ஒன்று காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் உடன் இருந்த மற்றொரு வாலிபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். 

மேலும் காரில் இருந்த பெண் ஒருவர் படுகாயமடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்த நார்போலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், பலியான கார் டிரைவர் விஷால் மற்றும் உடன் இருந்தவர் அமோல் என்பது தெரியவந்தது. இவர்கள் மும்பையில் பணி முடிந்து காரில் நாசிக் சென்ற போது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

Next Story