திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித்திருவிழா ரத்து - கொடி மரத்துக்கு பணிவிடை நடந்தது


திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித்திருவிழா ரத்து - கொடி மரத்துக்கு பணிவிடை நடந்தது
x
தினத்தந்தி 18 July 2020 4:00 AM IST (Updated: 18 July 2020 6:40 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டது.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆண்டு தோறும் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடக்கும். 11-ம் திருநாள் அன்று தேரோட்டம் நடக்கும். தற்போது கொரோனா தொற்று காரணமாக தடை உத்தரவு அமலில் உள்ளதால் இந்தாண்டுக்கான ஆடித்திருவிழா ரத்து செய்யப்பட்டது.

இந்தநிலையில் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் ஆலோசனைப்படி, செயலாளர் பொன்னுத்துரை, பொருளாளர் ராமையா நாடார், துணைச்செயலாளர் ராஜேந்திரன், இணை செயலாளர்கள் வரதராஜபெருமாள், ராதாகிருஷ்ணன், செல்வின் ஆகியோர் நேற்று காலையில் கொடி மரத்துக்கு சமூக இடைவெளியை பின்பற்றி பணிவிடை செய்தனர். வழக்கம்போல் அய்யா வைகுண்டருக்கு பணிவிடை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்க பக்தர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

Next Story