சின்னசேலம் அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி
சின்னசேலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.
சின்னசேலம்,
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ஏத்தாப்பூர் வடக்குகாடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி பாஞ்சாலி (வயது 40), இவர் நைனார்பாளையம் அருகே உள்ள தனது உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்காக ஏத்தாப்பூரிலிருந்து இவருடைய உறவினர் முருகன்(50), இவரது மகன் முனிராஜ் ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் சேலம்-விருத்தாசலம் வழியாக வந்து கொண்டிருந்தனர். தாத்தா திரிபுரம் அருகே வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் முருகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதின.
இதில் முருகன், பாஞ்சாலி, முனிராஜ், முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த காளசமுத்திரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் கோபிநாதன்(30), இவருடன் வந்த அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி மகன் சாமிக்கண்ணு ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சின்ன சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக முருகனை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துள்ளார். இதுபற்றி கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான காள சமுத்திரம் கோபிநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
Related Tags :
Next Story