கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயாருக்கு சத்துணவு உதவியாளர் பணி நியமன ஆணை அமைச்சர் வழங்கினார்


கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயாருக்கு சத்துணவு உதவியாளர் பணி நியமன ஆணை அமைச்சர் வழங்கினார்
x
தினத்தந்தி 27 July 2020 7:34 PM GMT (Updated: 27 July 2020 7:34 PM GMT)

கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயாருக்கு சத்துணவு உதவியாளர் பணி நியமன ஆணை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

மெஞ்ஞானபுரம்,

மெஞ்ஞானபுரம் அருகே கல்விளை இந்திரா நகரைச் சேர்ந்த உச்சிமாகாளி மகள் முத்தார் (வயது 8) கடந்த 15-ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கல்விளை இந்திரா நகருக்கு சென்று, முத்தாரின் தாயார் உச்சிமாகாளிக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர், உச்சிமாகாளிக்கு பரமன்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு உதவியாளராக வேலை செய்ய பணிநியமன ஆணை வழங்கினார். மேலும் அவருக்கு 3 சென்ட் இலவச வீட்டுமனை பட்டா, பசுமை வீடுகள் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணை ஆகியவையும் வழங்கப்பட்டது.

மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, சண்முகநாதன் எம்.எல்.ஏ., திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, ஆதிதிராவிடர் நல அலுவலர் பரிமளா, மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் செல்வகுமார், உடன்குடி யூனியன் ஆணையாளர் ராணி, செம்மறிக்குளம் பஞ்சாயத்து தலைவி அகஸ்டா மரிய தங்கம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.



Next Story