தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு


தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 29 July 2020 12:07 AM GMT (Updated: 29 July 2020 12:07 AM GMT)

தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கரிக்குளம் காலணி, குறிஞ்சிநகர், முள்ளக்காடு மற்றும் பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் காய்ச்சல் சிறப்பு முகாமில் சளி மாதிரிகள் சேகரிக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள அனைவருக்கும் தெர்மல் ஸ்கிரினிங் மற்றும் பல்சஸ் பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு பகுதியில் சளி, காய்ச்சல் பாதிப்பு உள்ள நபர்கள் அதிகளவு கண்டறியப்பட்டால் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களை உடனடியாக தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

பரிசோதனை

பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வரும்போது முககவசங்கள் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணித்து கொரோனா தொற்று பரவாமல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story