மாவட்ட செய்திகள்

உடுமலை போலீஸ்காரர் உள்பட 18 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 757 ஆக உயர்வு + "||" + Corona for 18 people, including Udumalai policeman

உடுமலை போலீஸ்காரர் உள்பட 18 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 757 ஆக உயர்வு

உடுமலை  போலீஸ்காரர் உள்பட 18 பேருக்கு கொரோனா  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 757 ஆக உயர்வு
உடுமலை போலீஸ்காரர் உள்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 757 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர், 

இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி பொது போக்குவரத்து முடக்கம், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாளுடன் (வெள்ளிக்கிழமை) 6-வது கட்ட ஊரடங்கும் முடிவடைகிறது.

இருப்பினும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா தற்போது தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அதன்படி நேற்று மட்டும் தமிழகத்தில் 6 ஆயிரத்து 972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு இருந்தது. திருப்பூர் மாவட்டத்தில் போலீஸ்காரர் உள்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

757 ஆக உயர்வு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊதியூரை சேர்ந்த 38 வயது ஆண், காங்கேயம் சாவடிபாளையத்தை சேர்ந்த 53 வயது ஆண், பச்சபாளையத்தை சேர்ந்த 52 வயது ஆண், பல்லடம் பனப்பாளையத்தை சேர்ந்த 34 வயது பெண், வடுகபாளையத்தை சேர்ந்த 44 வயது ஆண், ஆதியூர் நெசவாளர்காலனியை சேர்ந்த 26 வயது பெண், காங்கேயம் மரவபாளையத்தை சேர்ந்த 20 வயது பெண், பழங்கரை அவினாசிலிங்கம்பாளையத்தை சேர்ந்த 35 வயது பெண், அவினாசி நடுவச்சேரியை சேர்ந்த 45 வயது ஆண், தெக்கலூரை சேர்ந்த 27 வயது பெண், சமத்துவபுரத்தை சேர்ந்த 50 வயது பெண், திருமுருகன்பூண்டியை சேர்ந்த 68 வயது ஆண், உடுமலையை போலீஸ் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றும் 32 வயது போலீஸ்காரர், உடுமலை வடபூதினம் பகுதியை சேர்ந்த 27 வயது பெண், காங்கேயம் ரோடு குமாரசாமிகாலனியை சேர்ந்த 36 வயது ஆண், உடுமலை பூலாங்கிணறை சேர்ந்த 35 வயது ஆண், உடுமலை கரட்டூர் பகுதியை சேர்ந்த 26 வயது பெண், காங்கேயம் கதிர்நகரை சேர்ந்த 51 வயது ஆண் ஆகிய 18 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் மேல்சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவர்களையும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 757 ஆக உயர்ந்துள்ளது.