விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 194 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,374 ஆக உயர்வு
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 194 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8,374 ஆக உயர்ந்தது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 58,398 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 8,180 பேருக்கு கொரோனா தொற்று உறுதிஆனது. 5,480 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. இதில் 4,664 பேர் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 6 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 871 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 194 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் சிவன்கோவில் தெருவை சேர்ந்த 56 வயது நபர், சாஸ்திரிநகரை சேர்ந்த 53 வயது நபர், வ.உ.சி.நகரை சேர்ந்த 70 வயது முதியவர், லட்சுமிநகரை சேர்ந்த 32 வயது நபர், ஆர்.பி.ஆர்.நகரை சேர்ந்த 18 வயது பெண், ஆமத்தூர் போலீஸ்நிலையத்தில் பணியாற்றும் 38 வயது போலீஸ்காரர், அகமது நகரை சேர்ந்த 53 வயது நபர், தீயணைப்புத்துறையில் பணியாற்றும் 58 வயது நிலையஅதிகாரி, கருப்பசாமிநகரை சேர்ந்த 45 வயது பெண், 27,45, 30 வயது நபர்கள், விருதுநகர் யூனியன் அலுவலகத்தில் பணியாற்றும் 40, 41, 58, 51, 40 வயது நபர்கள், 42 வயது பெண் உள்பட மொத்தம் 7 பேர், ஆயுதப்படைபோலீஸ் குடியிருப்பில் 29, 36 வயது நபர்கள், 40 வயது பெண், 9 வயது சிறுவன் உள்ளிட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
சிவகாசி
மேலும் சிவகாசி ஆசாரி காலனியை சேர்ந்த 36 பேர், குந்தலப்பட்டியை சேர்ந்த 8 பேர், மன்னார்கோட்டையை சேர்ந்த 8 பேர், குன்னூரை சேர்ந்த 26 பேர், துலுக்கப்பட்டியை சேர்ந்த 8 பேர், மல்லாங்கிணறு, வடக்குநத்தம், கோப்பளாக்கரை, திருச்சுழி, வெற்றிலையூரணி, மானூர், அருப்புக்கோட்டை, செட்டிக்குறிச்சி, மீசளூர் பனையூரை சேர்ந்த 10 பேர், குல்லூர்சந்தை அகதிகள் முகாமை சேர்ந்த 12 பேர் உள்பட 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
8,374 ஆக உயர்வு
இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 8,374 ஆக உயர்ந்துள்ளது. நேற்று தெரிவிக்கப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் நகர் பகுதிகளில் உள்ள பரிசோதனை முடிவுகள் தான் அதிகம் வெளியாகி உள்ளது.
939 மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 108 பேருக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டதட்ட 11 சதவீதம் பேர் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமப்பகுதி முடிவுகள் நேற்று வெளியாகவில்லை. எனவே பாதிப்பு எண்ணிக்கை நேற்றைய தினம் குறைந்து உள்ளது. கிராமப்பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தும் பட்சத்தில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைய வாய்ப்பு உள்ளது.
5 பேர் பலி
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றால் 5 பேர் பலியாகி உள்ளனர். எஸ்.புதுப்பட்டியை சேர்ந்த 64 வயது நபர், அருப்புக்கோட்டையை சேர்ந்த 86 வயது முதியவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும், கிருஷ்ணாபுரம் 40 வயது நபர், ராஜபாளையம் 60 வயது முதியவர் நெல்லை அரசு மருத்துவமனையிலும், அருப்புக்கோட்டையை சேர்ந்த 65 வயது முதியவர் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story