நாடாளுமன்றத்தில் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்த வேண்டும் பார்த்திபன் எம்.பி.யிடம் விவசாயிகள் மனு


நாடாளுமன்றத்தில் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்த வேண்டும்  பார்த்திபன் எம்.பி.யிடம் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 31 July 2020 3:58 AM GMT (Updated: 31 July 2020 3:58 AM GMT)

8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த விவசாயிகள் சேலம் அஸ்தம்பட்டியில் பார்த்திபன் எம்.பி.யை சந்தித்து மனு கொடுத்தனர்.

சேலம், 

சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் மத்திய-மாநில அரசுகள் 8 வழிச்சாலை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த விவசாயிகள் நேற்று சேலம் அஸ்தம்பட்டியில் பார்த்திபன் எம்.பி.யை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் 8 வழிச்சாலை வேண்டாம் என்று சேலம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, தர்மபுரி ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும் 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பார்த்திபன் எம்.பி. கூறும்போது, விவசாய நிலங்கள், மலைகள், நீர் ஆதாரங்கள் ஆகியவற்றை அழிக்கும் 8 வழிச்சாலை திட்டம் வேண்டாம். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசப்படும். மேலும் ஏற்கனவே உள்ள அரூர், உளுந்தூர்பேட்டை சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். 8 வழிச்சாலைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணையில் உள்ளது. இதில் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

Next Story