கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு: புதிதாக 31 பேருக்கு கொரோனா


கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் பாதிப்பு:  புதிதாக 31 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 31 July 2020 6:36 AM GMT (Updated: 31 July 2020 6:37 AM GMT)

கரூர் மாவட்டத்தில், ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூர், 

கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என்ன தான் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்கள் அதனை கடைப்பிடித்தாலும் கொரோனா தனது கோர முகத்தை காட்டிக்கொண்டு தான் இருக்கிறது. நேற்று முன்தினம் கரூரில் 29 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளது மாவட்ட மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அதன் விவரம் வருமாறு:- கரூர் வாங்கல் பகுதியில் 75 வயது முதியவர், 4 வாலிபர்கள், 27 வயது பெண், 49 வயது பெண், கரூர் மேட்டுத்தெருவில் 10 மற்றும் 13 வயது சிறுவர்கள், 37 வயது பெண், கரூர் கைகோனார் தெருவில் 20 வயது வாலிபர், 31 வயது பெண், வெங்கமேட்டில் 20 வயது வாலிபர், 19 வயது பெண், 42 வயது பெண், வாங்கப்பாளையத்தில் 68 வயது முதியவர்,

31 பேருக்கு தொற்று

கரூர் ராம்நகரில் 45 வயது ஆண், 31 வயது பெண், கோவிந்தம்பாளையத்தில் 28 வயது வாலிபர், தெரசா நகரை சேர்ந்த 51 வயது பெண், காட்டுப்புத்தூரை சேர்ந்த 27 வயது பெண், வேலாயுதம்பாளையத்தில் 44 வயது ஆண், வெள்ளாளபட்டியில் 41 வயது ஆண், திண்டுக்கல்ரோடு பகுதியில் 48 வயது பெண், அண்ணாசாலையை சேர்ந்த 41 வயது ஆண், ராணிமங்கம்மாள் தெருவில் 50 வயது ஆண், வெள்ளியணையை சேர்ந்த 34 வயது பெண் மற்றும் 41 வயது ஆண், புலியூரை சேர்ந்த 23 வயது வாலிபர், லிங்கத்தூர் காமாட்சியம்மன்கோவில் தெருவை சேர்ந்த 42 வயது ஆண், நாவல்நகரை சேர்ந்த 78 வயது முதியவர் என நேற்று மட்டும் ஒரே நாளில் மொத்தம் 31 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 10 பேர் நேற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Next Story