வாலாஜாபாத் அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.42 கோடியில் தடுப்பணை


வாலாஜாபாத் அருகே பாலாற்றின் குறுக்கே ரூ.42 கோடியில் தடுப்பணை
x
தினத்தந்தி 2 Aug 2020 1:50 AM GMT (Updated: 2 Aug 2020 1:50 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு கூடும் திருமுக்கூடல் பகுதி உள்ளது. இந்த பகுதியில் போதிய நீர் வசதி இல்லாததால் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

வாலாஜாபாத்,

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா அருகே உள்ள உள்ளாவூர் பகுதியில் பாலாற்றின் குறுக்கே ரூ.42 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் 2 மதகுகளுடன் கூடிய தடுப்பணை கட்ட அனுமதி வழங்கியது. தடுப்பணை கட்டும் பணியை தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அப்போது உள்ளாவூர் பகுதியில் தடுப்பணை கட்டுவதற் கான பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சரும், காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான வி.சோமசுந்தரம், காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் காஞ்சி பன்னீர்செல்வம், மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணைச் செயலாளர் சத்யா, ஓன்றிய செயலாளர் அக்ரி நாகராஜன், பிரகாஷ் பாபு, தங்கபஞ்சாட்சரம், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் பாஸ்கரன், மார்க்கண்டன், கோவிந்தராஜன், ராமநாதன், ஒப்பந்ததாரர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story