விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு: கிராமங்களில் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்படும் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி


விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு: கிராமங்களில் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்படும் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 7 Aug 2020 7:18 AM GMT (Updated: 7 Aug 2020 7:18 AM GMT)

கிராமங்களில் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்படும் என்று விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்த சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கூறினார்.

விக்கிரவாண்டி,

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று மாலை ஆய்வு மேற் கொண்டார். பின்னர் அவர், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, மருத்துவக் கல்லூரி முதல்வர் குந்தவிதேவி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில் குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். மேலும் அவர், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூறி னார்.

இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர் களிடம் கூறியதாவது:-

தமிழக அரசின் சீரிய நடவடிக்கையால் கொரோனா வைரஸ் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்த வரையில் நகரத்தை விட கிராமங்களிலேயே அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கிராமங்களில் கொரோனா வைரஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் கொரோனா தடுப்பு பணிகள் முடுக்கி விடப்படும்.

விழுப்புரத்தில் நோயாளி களை முழுமையாக கவனித்து, இறப்பு விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. தற்போது நோய் தொற்று பாதிப்பை விட, மருத்துவமனையில் குண மடைந்து வீடு திரும்புபவர் களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு 12 வகையான மருத்துவ சிகிச்சை முறைகள் கையாளப்படுகிறது. கொரோ னாவால் பாதிக்கப் பட்ட 12 பெண்களுக்கு விழுப்புரம் அரசு மருத்துவ மனையில் சுக பிரசவமும், 34 பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையும் பிறந்துள்ளன. கொரோனா மட்டுமின்றி டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்கள் வராமல் தடுக்க ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சுகாதாரத்துறையினரால் இணைந்து நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story