முழு ஊரடங்கு: கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின


முழு ஊரடங்கு: கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 10 Aug 2020 1:27 AM GMT (Updated: 10 Aug 2020 1:27 AM GMT)

நெல்லை, தென்காசியில் நேற்று முழு ஊரடங்கையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

நெல்லை, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த ஜூலை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேபோல் ஆகஸ்டு மாதமும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று ஆகஸ்டு மாதத்திற்கான 2-வது ஞாயிற்றுக்கிழமை மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.

நெல்லையில் பால், மருந்தகங்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். வாகன போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

இதேபோல் தாழையூத்து, சேரன்மாதேவி, முக்கூடல், அம்பை, கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி, வள்ளியூர், பணகுடி, ராதாபுரம், வடக்கன்குளம் ஆகிய ஊர்களிலும் அனைத்து கடைகள் அடைக்கப்பட்டன. வாகன போக்குவரத்து ஏதும் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

சாலைகள் வெறிச்சோடியது

பாவூர்சத்திரத்தில் நெல்லை- தென்காசி ரோடு, பாவூர்சத்திரம்- சுரண்டை ரோடு, பாவூர்சத்திரம்- கடையம் ரோடு பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்நிலையில் நேற்று முழு ஊரடங்கு என்பதால் பாவூர்சத்திரத்தில் எந்தவித போக்குவரத்தும் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. ஆட்டோ, கார், வேன் இயக்கப்படவில்லை. வணிக நிறுவனங்கள், மர ஆலைகள், அரிசி ஆலைகள், ஓட்டு தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

செங்கோட்டையில் அனை த்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. ஒரு சில ஆட்டோக்கள் மட்டும் ஓடியது. சாலைகள், தெருக்களில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது.

இதேபோல் ஆலங்குளம், சுரண்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், சிவகிரி, வாசுதேவநல்லூர் உள்ளிட்ட தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Next Story