போலீசாருக்கு கொரோனா தொற்று: கடையநல்லூர் போலீஸ் நிலையம் மூடப்பட்டது
போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் கடையநல்லூர் போலீஸ் நிலையம் மூடப்பட்டது
கடையநல்லூர்,
கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் 7 போலீசாருக்கு நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்று உறுதியானது. நேற்று மேலும் 2 போலீசாருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.
இதைத் தொடர்ந்து கடையநல்லூர் நகராட்சி ஆணையர்குமார்சிங் அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்வாளர் மாரிச்சாமி , மேற்பார்வையில் நகராட்சி பணியாளர்கள் போலீஸ் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர். இதை தொடர்ந்து நேற்றுமுதல் கடையநல்லூர் போலீஸ் நிலையம்தற்காலிகமாக மூடப்பட்டது.
Related Tags :
Next Story