காஞ்சீபுரம் அருகே போலி டாக்டர் கைது


காஞ்சீபுரம் அருகே போலி டாக்டர் கைது
x
தினத்தந்தி 12 Aug 2020 6:15 AM IST (Updated: 12 Aug 2020 6:15 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தை அடுத்த மாகரல் கிராமத்தில் கனிகண்டீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41). இவர் எம்.பி.பி.எஸ். படிக்காமல் ஆங்கில மருத்துவ முறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஜீவாவுக்கு புகார் வந்தது.

அதன் பேரில், காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஜீவா தலைமையிலான குழுவினர் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.

கைது

விசாரணையில் அவர் எம்.பி. பி.எஸ். படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. அதன் பேரில் மாகரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிஷோர்குமார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் செந்தில்குமாரை கைது செய்தார்.

மேலும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story