மாவட்ட செய்திகள்

பெங்களூரு நகரில் நடிகர் புனித் ராஜ்குமார் சைக்கிள் பயணம் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல் + "||" + In the city of Bangalore Actor Punith Rajkumar Cycling Video viral on social websites

பெங்களூரு நகரில் நடிகர் புனித் ராஜ்குமார் சைக்கிள் பயணம் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

பெங்களூரு நகரில் நடிகர் புனித் ராஜ்குமார் சைக்கிள் பயணம் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
பெங்களூரு நகரில் நடிகர் புனித் ராஜ்குமார் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். இதுதொடர்பான வீடியோவை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி உள்ளது.
பெங்களூரு,

கன்னட திரை உலகில் பிரபல கதாநாயகனாக இருப்பவர் புனித் ராஜ்குமார். இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார். புனித் ராஜ்குமாரை கர்நாடக மக்கள் செல்லமாக ‘அப்பு‘ என்று அழைத்து வருகிறார்கள். பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்த புனித் ராஜ்குமார், கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும் அவர் அவ்வப்போது தன்னுடைய உடற்பயிற்சி வீடியோக்களையும், தான் செய்த வித்தியாசமான செயல்கள் தொடர்பான வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்.


அதன் தொடர்ச்சியாக தற்போது தான், பெங்களூரு நகரில் சைக்கிளில் வலம் வருவதை சமூக வலைத்தளங்களில் புனித் ராஜ்குமார் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் சைக்கிள் பயணம் மேற்கொள்வதற்கான உடைகளை புனித் ராஜ்குமார் அணிந்து கொள்கிறார். பின்னர் அவர் பெங்களூரு சதாசிவாநகரில் உள்ள தன்னுடைய வீட்டில் இருந்து சைக்கிளில் புறப்படுகிறார். அவர் சதாசிவாநகரில் உள்ள தெருக்களில் சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார். பின்னர் அவர் மேக்ரி சர்க்கிள், வசந்த் நகர், சாளுக்கியா சர்க்கிள், விதான சவுதா, சின்னசாமி கிரிக்கெட் மைதானம், எம்.ஜி. ரோடு ஆகிய பகுதிகளில் சைக்கிளில் வலம் வருகிறார்.

அதையடுத்து மீண்டும் அதே வழியாக சைக்கிள் பயணம் மேற்கொண்டு தன்னுடைய வீட்டை சென்றடைகிறார். அவர் சைக்கிள் பயணம் மேற்கொண்டபோது அவரை பொதுமக்கள் யாரும் கண்டுபிடிக்கவில்லை.

அவர் சாதாரணமாக மக்களோடு மக்களாக பயணம் செய்கிறார். மேலும் அவர் சைக்கிள் பயணத்தின்போது உடல் ஆரோக்கியம் குறித்து, சைக்கிள் ஓட்டுவதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் ஏராளமானோர் பார்த்துள்ளனர். இதற்கு முன்பாக பெங்களூரு அருகே உள்ள நந்தி மலைக்கு புனித் ராஜ்குமார் சைக்கிள் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.