மாவட்ட செய்திகள்

ராகுல் காந்தி தலைமையை தடுப்பது காங்கிரசை அழித்துவிடும் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் எச்சரிக்கை + "||" + Blocking the leadership of Rahul Gandhi Will destroy Congress Shiv Sena MP Sanjay Rawat warns

ராகுல் காந்தி தலைமையை தடுப்பது காங்கிரசை அழித்துவிடும் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் எச்சரிக்கை

ராகுல் காந்தி தலைமையை தடுப்பது காங்கிரசை அழித்துவிடும்  சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் எச்சரிக்கை
ராகுல் காந்தி தலைமையை தடுப்பது காங்கிரஸ் கட்சியை அழித்துவிடும் என சஞ்சய் ராவத் எச்சரித்து உள்ளார்.
மும்பை,

கட்சிக்கு நிரந்தரமான, பொறுப்புகளை ஏற்க கூடிய தலைவர் தேவை என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 23 பேர் கடந்த 23-ந் தேதி கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.

இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து சிவசேனா மூத்த தலைவரான சஞ்சய் ராவத் எம்.பி. தனது கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வில் ராகுல்3காந்தி காங்கிரசுக்கு தலைமை ஏற்பதை தடுப்பது அக்கட்சியை அழித்துவிடும் என எச்சரித்து உள்ளார். மேலும் அவர் பிரதமர் மோடிக்கு நிகராக வலிமையான தலைவர்கள் காங்கிரசில் இல்லை எனவும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-


ராகுல் காந்தியை தடுப்பதில் மும்முரமாக இருப்பது கட்சியை சீர்குலைக்க உதவுவதோடு அதன் அழிவுக்கு வழிவகுக்கும். காந்தி குடும்பத்தில் அல்லாதவர் கட்சி தலைமையை ஏற்பது நல்ல திட்டம் தான்.

ஆனால் கடிதம் எழுதிய 23 தலைவர்களில் ஒருவருக்கு கூட அந்த தகுதி இல்லை. விதவிதமான முகமூடிகளுடன் காங்கிரஸ் நாடு முழுவதும் தற்போதும் உள்ளது. அந்த முகமூடிகள் எல்லாம் கழற்றப்பட்டால் காங்கிரஸ் வலுவான கட்சியாக திகழும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.