தி.மு.க. கிளை செயலாளர் வெட்டிக்கொலை
ஊரப்பாக்கம் அருகே தி.மு.க. கிளை செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை அருகே உள்ள செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த மண்ணிவாக்கம் அண்ணா நகர், கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 36). பெயிண்டரான இவர், அண்ணா நகர் தி.மு.க. கிளை செயலாளராக பதவி வகித்து வந்தார்.
நேற்று இரவு ஆதனூர் ரோட்டில் பார்த்திபன் நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் பார்த்திபனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.
முன்விரோதம் காரணமா?
இதுபற்றி தகவல் அறிந்துவந்த கூடுவாஞ்சேரி போலீசார், பார்த்திபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா?. ரியல் எஸ்டேட் தொழில் போட்டியா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரித்து வருகின்றனர்.
மேலும் கொலை கும்பலை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விரைவில் கொலையாளிகளை பிடித்துவிடுவோம் என போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story