செங்கல்பட்டு போலீஸ் குடியிருப்பில் போலீஸ் ஏட்டு அழுகிய நிலையில் பிணமாக மீட்பு


செங்கல்பட்டு போலீஸ் குடியிருப்பில் போலீஸ் ஏட்டு அழுகிய நிலையில் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 5 Sept 2020 3:02 AM IST (Updated: 5 Sept 2020 3:02 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு போலீஸ் குடியிருப்பில் போலீஸ் ஏட்டு அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

செங்கல்பட்டு,

கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தவர் பழனி (வயது 41). இவர் செங்கல்பட்டு போலீஸ் குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவருக்கு உஷா என்ற மனைவியும், அகில் ஆதித்தியன் என்ற மகனும், சசிபிரியா என்ற மகளும் உள்ளனர்.

கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக உஷா மகன் மற்றும் மகளை அழைத்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த 4 மாதங்களாக அங்கு இருந்தார். 3 நாட்களுக்கு முன்னர் பழனி பணியை முடித்து கொண்டு விடுப்பு எடுத்துக்கொள்வதாக கூறிவிட்டு வீட்டுக்கு வந்தார்.

பிணமாக கிடந்தார்

இந்த நிலையில் நேற்று காலை அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து செங்கல்பட்டு டவுன் போலீசில் புகார் செய்தனர். வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தபோது போலீஸ் ஏட்டு பழனி அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனி பணிச்சுமை அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story