கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் ஒன்றியங்களில் அ.தி.மு.க. பாசறைக்கு உறுப்பினர் சேர்க்கை


கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் ஒன்றியங்களில் அ.தி.மு.க. பாசறைக்கு உறுப்பினர் சேர்க்கை
x
தினத்தந்தி 7 Sep 2020 5:04 AM GMT (Updated: 7 Sep 2020 5:04 AM GMT)

கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் சரங்கராபுரம் ஒன்றியங்களில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.

சின்னசேலம்,

கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் இளைஞர் பாசறை மற்றும் கழக நிர்வாகிகளுக்கான உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமான ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணைய தலைவரும், வடக்கு ஒன்றிய கழக செயலாளருமான ராஜசேகர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் எம்.எல்.ஏ.அழகுவேல்பாபு, மாவட்ட கழக அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை, முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் சுப்பிரமணியன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் லட்சுமிசேகர் ஆகியோர் கலந்து கொண்டு அனைத்து கிராமத்திலும் உள்ள பூத் கமிட்டிக்கு இளைஞர் பாசறை நிர்வாகிகளை நியமித்து அதிக அளவில் உறுப்பினர்களை சேர்த்து வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து ஆலோசனை வழங்கினார்கள்.

கூட்டத்தில் ஒன்றிய பேரவை செயலாளர் பாலசுந்தரம், மாவட்ட முன்னாள் கவுன்சிலர் ராயப்பன், மண்டல பொறுப்பாளர்கள் இன்பசேகரன், சகாதேவன் அருள், முருகன், ராஜேந்திரன், பாசறை நிர்வாகிகள், ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சின்னசேலம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு உறுப்பினர் சேர்க்கை நயினார் பாளையத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பேரவை துணைச் செயலாளர் அருள், கூட்டுறவு வங்கி தலைவர்கள் கணேசன், முத்துசாமி, மண்டல பொறுப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளர் நமச்சிவாயம் வரவேற்றார்.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் பேசும்போது, சின்னசேலம் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளிலும் 69 பூத் கமிட்டிகள் அமைத்து இதில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு ஒரு பூத் கமிட்டி வீதம் 25 உறுப்பினர்களை சேர்க்கவும், கட்சி தலைமையின் வழிகாட்டுதலின்படி வளர்ச்சி பணிகளில் முழுமையாக ஈடுபடவும், ஜெயலலிதா பேரவை அமைப்புக்கு அதிக அளவில் உறுப்பினர்களை சேர்க்கவும் நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார். தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை கட்சி நிர்வாகிகளிடம் அவர் வழங்கினார்.

அதேபோல் சின்னசேலம் கிழக்கு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 27 ஊராட்சிகளிலும் 77 கிளைகளில் பேரவை அமைப்புக்கு புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்கள் மண்டல பொறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் மண்டல பொறுப்பாளர்கள் செந்தில்குமார், முருகேசன், ஆனந்த், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட தலைவர் விமல் ராஜ், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் பிரபு, விவசாய அணி இணைச் செயலாளர் சரவணன், பிரதிநிதி சுமதி முத்துசாமி, எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் சண்முகம், மருதை, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பெரியசாமி உள்பட சின்ன சேலம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 27 ஊராட்சிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சங்கராபுரம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி தேவபாண்டலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட மருத்துவர் அணி செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான டாக்டர்.காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். வடக்கு ஒன்றிய செயலாளர் அரசு அனைவரையும் வரவேற்றார்.

இதில் கலந்துகொண்ட நிர்வாகிகளுக்கு பாசறை உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள், கையேடு, தீர்மான புத்தகங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மண்டல பொறுப்பாளர்கள் திருமால், தமிழ்ச்செல்வன், குமார், இ.சுப்பிரமணியன், சக்கரவர்த்தி, ராமச்சந்திரன், கே.சுப்பிரமணியன், ஷாஜகான், அண்ணாமலை, பழனி, கார்த்திகேயன், சாமிநாதன், கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story