பெங்களூருவில் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை
பெங்களூருவில் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்துள்ளார்.
பெங்களூரு,
நாட்டிலேயே முதல் முறையாக தனியார் துறையில் ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா பெங்களூரு ஜக்கூர் விமான நிலையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-
நெருக்கடியான நேரத்தில் மருத்துவ சிகிச்சையை வழங்குவது மிக முக்கியமானது. இந்த ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை அவசர நேரத்தில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைக்க உதவும். ஹெலிகாப்டரிலேயே சிகிச்சை அளிக்க தேவையான வசதிகளும் இருக்கின்றன.
இந்த நிறுவனங்கள், இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்சை பெங்களூருவில் நிறுத்தி வைக்க முடிவு செய்ததை நான் வரவேற்கிறேன்.
மருத்துவர்களின் சேவை
கொரோனா நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் மருத்துவர்களின் சேவை அதிகமாக தேவைப்படும் நேரத்தில் இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை முக்கியமானது. கொரோனா நோயாளிகளை பாதுகாப்பான முறையில் அழைத்து செல்லவும் இந்த ஹெலிகாப்டரில் வசதி செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு, மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story