பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்கக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்கக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Sept 2020 3:15 AM IST (Updated: 12 Sept 2020 6:40 AM IST)
t-max-icont-min-icon

பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்கக் கோரி திருத்துறைப்பூண்டியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

பயிர்க்காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க கோரியும் முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ். பாண்டியன் தலைமை தாங்கினார். ஆடலரசன் எம்.எல்.ஏ. மாவட்ட துணைச் செயலாளர் எம்.எஸ்.கார்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பயிர்க்காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும், கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாநில விவசாய அணி செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான ஏ.கே.எஸ். விஜயன், தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் வசந்த், துணை அமைப்பாளர் கமல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story