மாவட்ட செய்திகள்

வேலை செய்ய பெற்றோர் வற்புறுத்தியதால் வீட்டைவிட்டு வெளியேறிய பள்ளி மாணவி-3 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர் + "||" + A school girl who left home because his parents forced him to work

வேலை செய்ய பெற்றோர் வற்புறுத்தியதால் வீட்டைவிட்டு வெளியேறிய பள்ளி மாணவி-3 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்

வேலை செய்ய பெற்றோர் வற்புறுத்தியதால் வீட்டைவிட்டு வெளியேறிய பள்ளி மாணவி-3 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்
பல இடங்களில் தேடியும் மகளை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்தனர்.
ஆலந்தூர், 

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி, அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு திடீரென அவர் வீட்டில் இருந்து மாயமானார். 

உடனடியாக பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரபாகர் தலைமையில் மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சபரிநாதன் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் மாயமான பள்ளி மாணவியை சென்னை மாநகர பகுதிகளில் தேடினார்கள். அப்போது இரவு நேரத்தில் வடபழனி பகுதியில் தனியாக நின்ற மாணவியை மீட்டனர்.

விசாரணையில், கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் விடுமுறை என்பதால் வீட்டில் இருக்கும் தன்னை, தனது பெற்றோர் வீட்டு வேலைகளை செய்ய சொல்லி துன்புறுத்தியதால் மனமுடைந்து வீட்டைவிட்டு வெளியேறியதாக கூறினார். அவரது பெற்றோரை வரவழைத்த போலீசார், மாணவிக்கும், அவரது பெற்றோருக்கும் அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைத்தனர்.

மாணவி மாயமானதாக புகார் அளித்த 3 மணிநேரத்தில் மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த தனிப்படையினரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

1. போலீஸ் கமிஷனர் பெயரில் போலி முகநூல் கணக்கு-சைபர் கிரைம் போலீசார் முடக்கினர்
போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பெயரிலேயே போலியான முகநூல் கணக்கு தொடங்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது
2. சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம்: மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் பணியிடை நீக்கம்
சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தில் மின்வாரிய அதிகாரிகள் 2 பேரை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
3. உடல் வெப்பம் அதிகமாக இருந்ததால ‘என்னை ½ மணி நேரம் மட்டும் தேர்வு எழுத அனுமதித்தனர்- வியாசர்பாடி மாணவி குற்றச்சாட்டு
சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியை சேர்ந்தவர் நிவேதிதா (வயது 18). இவர் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதினார்.
4. சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 சதவீதமாக குறைந்தது
சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 சதவீதமாக குறைந்துள்ளது.
5. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் குறைந்துள்ளது.