மாவட்ட செய்திகள்

தளவாய்புரத்தில், பீர்பாட்டிலால் தலையில் அடித்து தொழிலாளி கொலை - தம்பி கைது + "||" + In talavaypuram, Beer bottle strikes worker in the head and kills him - Brother arrested

தளவாய்புரத்தில், பீர்பாட்டிலால் தலையில் அடித்து தொழிலாளி கொலை - தம்பி கைது

தளவாய்புரத்தில்,  பீர்பாட்டிலால் தலையில் அடித்து தொழிலாளி கொலை - தம்பி கைது
தளவாய்புரத்தில் பீர்பாட்டிலால் தலையில் அடித்து தொழிலாளியை கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர்.
தளவாய்புரம், 

தளவாய்புரம் கூரை பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்தவர் கல்யாணகுமார் (வயது 40). சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று மாலை இவருடைய தம்பி முருகன் (35) என்பவர், கல்யாண குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது அவர் திடீரென கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் தலையில் அடித்தார். இதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக கல்யாணகுமார் இறந்தார்.

இதுகுறித்து தளவாய்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கல்யாணகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல் ஏசுதாஸ் வழக்குப்பதிவு செய்து, அண்ணனை கொலை செய்த தம்பி முருகனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.