மாவட்ட செய்திகள்

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர் + "||" + The Liberation Tigers of Tamil Eelam (LTTE) who had come to besiege the police station were detained

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர்
திட்டச்சேரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திட்டச்சேரி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட ஆதலையூர் மேலத்தெருவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 14-ந் தேதி 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒன்றிய செயலாளர் காசிநாதன் தலைமையில் திட்டச்சேரி போலீஸ் நிலையத்தை முற்றுகை போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். நேற்று காலை 10 மணியளவில் திட்டச்சேரி போலீஸ் நிலையத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன் மற்றும் நாகை சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவழகன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் திட்டச்சேரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட வந்தனர்.


பேச்சுவார்த்தை

அவர்களை திட்டச்சேரி பஸ் நிலையம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் நாகை மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சுமூக தீர்வு ஏற்பட்டதால் விடுதலை சிறுத்தை கட்சியினர் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையொட்டி வேளாங்கண்ணி இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், கீழையூர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, திட்டச்சேரி பேலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் திட்டச்சேரி போலீஸ் நிலையத்தில் இருந்து பஸ் நிலையம் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.