கொப்பலில் காலில் செருப்புடன் ஏர் உழுத பா.ஜனதா எம்.பி.- மகன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி - விவசாயிகள் போராட்டம்


கொப்பலில் காலில் செருப்புடன் ஏர் உழுத பா.ஜனதா எம்.பி.- மகன் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி - விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Sep 2020 10:45 PM GMT (Updated: 20 Sep 2020 10:22 PM GMT)

கொப்பலில் காலில் செருப்பு அணிந்தபடி விளைநிலத்தில் ஏர் உழுத பா.ஜனதா எம்.பி., அவரது மகனை கண்டித்தும், அவர்கள் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

கொப்பல்,

வடகர்நாடக மாவட்டமான கொப்பலில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கொப்பல் மாவட்ட விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் கொப்பல் அருகே ஒரு கிராமத்தில் விவசாயிகள், விவசாய பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் அந்த வழியாக காரில் வந்த சங்கண்ணா கரடி எம்.பி.யும், அவரது மகன் அமரேஷ் கரடியும் காரை நிறுத்தி கீழே இறங்கினர். பின்னர் விவசாயிகளிடம், கரடி சங்கண்ணா எம்.பி. குறைகளை கேட்டறிந்து கொண்டார். பின்னர் சங்கண்ணா கரடி எம்.பி.யும், அமரேஷ் கரடியும் செருப்பு காலுடன் விவசாய பணியில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில் காலில் செருப்புடன் விவசாய பணியில் ஈடுபட்டு விவசாயிகளை அவமதித்து விட்டதாக, சங்கண்ணா கரடி எம்.பி., அமரேஷ் கரடி மீது கொப்பல் மாவட்ட விவசாய சங்கத்தினர் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் காலில் செருப்புடன் விவசாய பணியில் ஈடுபட்ட சங்கண்ணா கரடி எம்.பி, அமரேஷ் கரடி ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி கொப்பலில் பல இடங்களில் விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

Next Story