வடமதுரை அருகே, தலைகுப்புற கவிழ்ந்த சரக்கு வேன் - முட்டைகள் உடைந்து நாசம்


வடமதுரை அருகே, தலைகுப்புற கவிழ்ந்த சரக்கு வேன் - முட்டைகள் உடைந்து நாசம்
x
தினத்தந்தி 23 Sept 2020 3:30 AM IST (Updated: 23 Sept 2020 1:28 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து வாத்து முட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று கேரள மாநிலத்துக்கு சென்று கொண்டிருந்தது. அந்த வேனை, தர்மபுரியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 21) என்பவர் ஓட்டினார்.

வடமதுரை, 

திருச்சி-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் வடமதுரையை அடுத்த தாமரைப்பாடி அருகே நேற்று காலை 8 மணி அளவில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 


இதில் டிரைவர் தினேஷ்குமார் மற்றும் கிளீனர் செல்வராஜ் (25) ஆகியோர் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதேநேரத்தில் வேனில் இருந்த வாத்து முட்டைகள் உடைந்து நாசமாயின. இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story