மாவட்ட செய்திகள்

சூளகிரி அருகே, விவசாயி அடித்துக்கொலை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு + "||" + Farmer beaten to death near Choolagiri - Police crackdown on mysterious individuals

சூளகிரி அருகே, விவசாயி அடித்துக்கொலை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சூளகிரி அருகே, விவசாயி அடித்துக்கொலை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
சூளகிரி அருகே விவசாயியை அடித்துக்கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே சகாதேவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணப்பா (வயது 48), விவசாயி. இவருக்கு எல்லம்மா என்ற மனைவியும், 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நாராயணப்பா சுரக்காலபள்ளி என்ற இடத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் இரவு நேரத்தில் படுத்து தூங்குவது வழக்கம்.

அதேபோல் நேற்று முன்தினம் இரவும் அவர் தோட்டத்திற்கு சென்றார். பின்னர், அங்கு 3 பேருடன் சேர்ந்து அவர் மது குடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது மனைவி, உணவு கொடுத்து விட்டு சென்றார். நாராயணப்பா உணவை பெற்றுக்கொண்டு மனைவியை வீட்டிற்கு அனுப்பி விட்டார்.

பின்னர், நள்ளிரவில் மனைவி எல்லம்மா தோட்டத்திற்கு சென்றார். அப்போது, நாராயணப்பா அடித்துக்கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கதறி அழுதார். இது குறித்து தகவல் அறிந்து சூளகிரி போலீசார் அங்கு சென்று நாராயணப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நாராயணப்பா, மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் விவசாயியை அடித்துக்கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் சூளகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. வேளாண் சட்டங்களால் அதிருப்தி பஞ்சாபில் மகனுடன் விவசாயி தற்கொலை
மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறாததால் மன உளைச்சலில் பஞ்சாபில் மகனுடன் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
2. வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் ரெயில் மறியல் பஞ்சாப், அரியானாவில் முழுவீச்சில் நடந்தது
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர். பஞ்சாப், அரியானாவில் முழுவீச்சில் போராட்டம் நடந்தது.
3. மணியாச்சி அருகே நடந்த கோர விபத்து: உயிரிழந்த விவசாய தொழிலாளிகள் 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் முதல்-அமைச்சர் அறிவிப்பு
மணியாச்சி அருகே நடந்த கோர விபத்து: உயிரிழந்த விவசாய தொழிலாளிகள் 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் முதல்-அமைச்சர் அறிவிப்பு.
4. டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினரை சந்தித்த பிரியங்கா காந்தி
டெல்லி டிராக்டர் பேரணியில் உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினரை பிரியங்கா காந்தி சந்தித்தார்
5. பூலாம்பட்டி அருகே கட்டையால் தாக்கி விவசாயி கொலை: தந்தை, 2 மகன்கள் கைது
பூலாம்பட்டி அருகே கட்டையால் தாக்கி விவசாயி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தந்தை மற்றும் 2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை