நீதிமன்றங்கள் முழுமையாக செயல்பட அனுமதிக்கக்கோரி - வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


நீதிமன்றங்கள் முழுமையாக செயல்பட அனுமதிக்கக்கோரி - வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Sep 2020 2:00 PM GMT (Updated: 23 Sep 2020 2:11 PM GMT)

நீதிமன்றங்கள் முழுமையாக செயல்பட அனுமதிக்கக்கோரி தஞ்சையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு- புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை மணிமண்டபம் அருகே உள்ள நீதிமன்றம் நுழைவு வாயில் அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டு நடவடிக்கை குழு மாநில துணைத்தலைவர் வக்கீல் நல்லதுரை தலைமை தாங்கினார். இணை செயலாளர் கருணாகரன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் உடனடியாக நீதிமன்றங்கள் முழுமையாக செயல்பட அனுமதிக்க வேண்டும். பார் கவுன்சில் வக்கீல் தொழிலை காப்பாற்றும் அமைப்பு. அது தற்போது தண்டிக்கும் அமைப்பாக மாறி இருப்பது கண்டிக்கத்தக்கது.

இடைநீக்கம் செய்யப்பட்ட வக்கீல்களின் உத்தரவை திரும்ப பெற வேண்டும். மேலும் அவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்ட வக்கீல்கள் தங்கள் தரப்பில் உள்ள நியாயங்களை எடுத்துக்கூற வாய்ப்பு அளிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் சதீஷ்குமார், அருண்பாண்டியன், வக்கீல்கள் ரம்யா, வித்யா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story