பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்துக்கு ரூ.1 கோடியில் புதிய கட்டிடம் - போலீஸ் சூப்பிரண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்


பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்துக்கு ரூ.1 கோடியில் புதிய கட்டிடம் - போலீஸ் சூப்பிரண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 24 Sept 2020 3:52 AM IST (Updated: 24 Sept 2020 3:52 AM IST)
t-max-icont-min-icon

பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்துக்கு ரூ.1 கோடியில் புதிய கட்டிடத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

காஞ்சீபுரம், 

பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையம் 1930-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கட்டிடங்கள் சேதம் அடைந்ததன் காரணமாக ரூ.1 கோடியே 2 லட்சத்து 70 ஆயிரம் செலவில் புதிய போலீஸ் நிலைய கட்டிடம் கட்ட தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதையடுத்து பழமையான பெரிய காஞ்சீபுரம் போலீஸ் நிலையம் இடிக்கப்பட்டு புதிய போலீஸ் நிலையம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

பூமி பூஜையில் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை, பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் வினோத், தனி பிரிவு கோதண்டம் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story