இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தீத்தடுப்பு செயல் விளக்க ஒத்திகை + "||" + Rehearsal for fire prevention demonstration at Indian Oil Corporation
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் தீத்தடுப்பு செயல் விளக்க ஒத்திகை
நவீன பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு அடங்கிய இந்த தொழிற்சாலையில் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் பாதுகாப்பு குறித்து செயல் விளக்க முகாம் நடைபெற்றது.
கருப்பூர்,
கருப்பூர் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற பெயரில் இண்டேன் சமையல் எரிவாயு சிலிண்டர் கியாஸ் நிரப்பும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. நவீன பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு அடங்கிய இந்த தொழிற்சாலையில் தீ தடுப்பு ஒத்திகை மற்றும் பாதுகாப்பு குறித்து செயல் விளக்க முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஐ.ஓ.சி. தொழிற்சாலை தலைமை முதன்மை மேலாளர் சிவராம கிருஷ்ணா தலைமை தாங்கினார். மேட்டூர் உதவி கலெக்டர் சரவணன், ஓசூர் தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் நலத்துறை இணை இயக்குனர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கியாஸ் உள்ளிருப்பு மற்றும் சிலிண்டர் லாரியிலிருந்து இறக்கும்போது தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தீயை அணைப்பது, தொழிலாளர்களுக்கு கியாசால் மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு கொண்டு செல்லுவது போன்ற செயல் விளக்கங்கள் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து உதவி கலெக்டர் சரவணன் கியாஸ் நிரப்பும் இடங்கள், பாதுகாப்பு, தொழிலாளர்களின் விவரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். இதில் ஓமலூர் தாசில்தார் கணேஷ், கருப்பூர் போலீஸ் இன்ஸ்பக்டர்(பொறுப்பு) செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள், தொழிற்சாலை ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.