மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில், புதிதாக 75 பேருக்கு கொரோனா தொற்று + "||" + In the district, coronavirus infection in 75 new people

மாவட்டத்தில், புதிதாக 75 பேருக்கு கொரோனா தொற்று

மாவட்டத்தில், புதிதாக 75 பேருக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 75 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 485 ஆக உயர்ந்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைகளில் இருந்த 98 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். கொரோனா சிகிச்சையில் மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 670 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது 670 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா தொற்றுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.

இதில் அரிமளம் ஒன்றியத்தில் நேற்று ராயவரம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 28 பேருக்கும், ஏம்பல் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 10 பேருக்கும், அரிமளம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 32 பேருக்கும், கடியாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 16 பேருக்கும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல் அரிமளம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞர், அதே பகுதியை சேர்ந்த 29 வயதுபெண், சிராயபட்டி பகுதியை சேர்ந்த 37 வயது பெண், பேரூராட்சி பகுதி சேர்ந்த 19 வயது வாலிபர் ஆகிய 4 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் 4 பேரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆதனக்கோட்டை சுகாதாரநிலைய வட்டாரத்திற்குட்பட்ட கிராமங்களான மறவப்பட்டியில் 45 வயது பெண்ணுக்கும், கட்டியாவயலில் 42 வயது பெண் மற்றும் 23 வயது பெண்ணுக்கும், பெருங்களூரில் 57 வயது பெண்ணுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 417 ஆகவும், சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. பெருங்களூரைச் சேர்ந்த 57 வயது பெண் கொரோனா தொற்றால் உயிரிழந்ததால் ஆதனக்கோட்டை வட்டாரத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 385 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.