பழனியில், செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
பழனியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றனர்.
பழனி,
பழனியில், கான்வென்ட் ரோட்டில் தேவாலயத்துக்கு சொந்தமான வணிக வளாகத் தில் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வளாகத்தில் பழனி ராஜாஜி சாலை பகுதியை சேர்ந்த முருகன் (வயது 40) என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு முருகன் மற்றும் ஊழியர்கள் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.
இந்நிலையில் நேற்று காலை கடையை திறக்க முருகன் வந்தபோது, பூட்டு உடைக் கப்பட்டு கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.18 ஆயிரம் திருடு போயிருந்தது. பின்னர் இந்த சம்பவம் குறித்து அவர் பழனி டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மர்ம நபர்கள் செல்போன் கடைக்கு அருகில் உள்ள ராசு என்பவரது சலூன் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்றதும், பணம் எதுவும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகி யிருந்த தடயங்களை சேகரித் தனர். பின்னர் இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
பழனியில் கடந்த வாரம் உழவர்சந்தை அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம், டி.வியை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று செல்போன் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். பழனியில் நடந்து வரும் தொடர் திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆகவே பழனி நகரில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story