வேலை வாங்கி தருவதாக மோசடி: முன்னாள் வருவாய் ஆய்வாளர் குண்டர் சட்டத்தில் கைது


வேலை வாங்கி தருவதாக மோசடி: முன்னாள் வருவாய் ஆய்வாளர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 7 Oct 2020 3:30 AM IST (Updated: 7 Oct 2020 10:04 AM IST)
t-max-icont-min-icon

அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடியில் ஈடுப்பட்ட முன்னாள் வருவாய் ஆய்வாளரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

கலவையை அடுத்த செங்கனாவரம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 40). ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்துள்ளார். மேலும் அவர்களுக்கு போலி பணி நியமன ஆணையையும் வழங்கியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் ராணிப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப்பதிவு செய்து, ராஜசேகரனை கைது செய்து வாலாஜா சிறையில் அடைத்தார்.

இந்தநிலையில் ராஜசேகரனின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து ராஜசேகரனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டார்.

Next Story