மாவட்ட செய்திகள்

ஆரல்வாய்மொழியில், வசந்தகுமார் நினைவு மவுன ஊர்வலம் - ஆஸ்டின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் + "||" + In aralvaymoli, Vasantha Kumar Memorial Silent Procession - Austin MLA Started

ஆரல்வாய்மொழியில், வசந்தகுமார் நினைவு மவுன ஊர்வலம் - ஆஸ்டின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

ஆரல்வாய்மொழியில், வசந்தகுமார் நினைவு மவுன ஊர்வலம் - ஆஸ்டின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
ஆரல்வாய்மொழியில் வசந்தகுமார் எம்.பி. நினைவு மவுன ஊர்வலம் நடந்தது. இதனை ஆஸ்டின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ஆரல்வாய்மொழி,

தோவாளை கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மறைவிற்கு 40 -ஆம் நாள் நினைவு மவுன ஊர்வலம் ஆரல்வாய்மொழியில் நடந்தது. தோவாளை கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். பேரூர் தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் துணைத் தலைவர் ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, விடுதலை சிறுத்தை கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பகலவன், ம.தி.மு.க. தோவாளை ஒன்றிய பொறுப்பாளர் நீலகண்டன், தி.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மவுன ஊர்வலம் ஆரல்வாய்மொழி சந்திப்பில் இருந்து தொடங்கியது. இதனை ஆஸ்டின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் வசந்தகுமார் எம்.பி. மகன் விஜய் வசந்த் கலந்து கொண்டார். ஊர்வலம் மெயின் ரோடு வழியாக சென்று பெருமாள்புரம் காமராஜர் சிலையை வந்தடைந்தது.

அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வசந்தகுமார் உருவப் படத்திற்கு விஜய் வசந்த் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு ஊர்வலத்தில் வந்த அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் சார்பில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி அருள் சபிதா ரெக்சலின், ராஜாக்கமங்கலம் வட்டார துணைத்தலைவர் கென்னடி, முன்னாள் தோவாளை வட்டார காங்கிரஸ் தலைவர் செல்வமணி, வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் அஸ்வின், நகர தலைவர் நேசமணி, தி.மு.க. மாவட்ட பிரதிநிதி நாகராஜன், செண்பகராமன்புதூர் ஊராட்சி தலைவர் கல்யாணசுந்தரம், ம.தி.மு.க. பேரூர் செயலாளர் முருகேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பெருமாள்புரத்திலுள்ள காமராஜர் சிலைக்கு விஜய் வசந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.