மாவட்ட செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில், காயங்களுடன் முதியவர் பிணம் - கொலையா? போலீசார் விசாரணை + "||" + In Srivilliputhur, the body of an old man with injuries - murder? Police investigation

ஸ்ரீவில்லிபுத்தூரில், காயங்களுடன் முதியவர் பிணம் - கொலையா? போலீசார் விசாரணை

ஸ்ரீவில்லிபுத்தூரில், காயங்களுடன் முதியவர் பிணம் - கொலையா? போலீசார் விசாரணை
ஸ்ரீவில்லிபுத்தூரில் காயங்களுடன் முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இவரை யாரேனும் கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் அருகே 65 வயதான முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அப்போது அந்த முதியவரின் தலையில் காயங்கள் இருந்தன. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை யாரேனும் கொலை செய்தார்களா அல்லது கீழே விழுந்து இறந்தாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த நகராட்சி அலுவலகம் அருகே தலையில் காயங்களுடன் முதியவர் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.