மாவட்ட செய்திகள்

வக்கீல் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது + "||" + The thuggery law fell on the lawyer

வக்கீல் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வக்கீல் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கயத்தாறு அருகே வழக்கு ஒன்றில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வக்கீல் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கயத்தாறு,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தெற்குமயிலோடை கிராமத்தைச் சேர்ந்த டேனியல் மகன் செல்லத்துரை. வக்கீல். இவர் கோழிப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். கடந்த மாதம், செல்லத் துரையும் அவரது கோழிப்பண்ணையில் பணிபுரியும் சரவணன் என்பவரும் சேர்ந்து கயத்தாரில் கீழ பஜாரில், காப்புலிங்கம்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்பவரை மதுபோதையில் இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலைசெய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கயத்தார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் வழக்குப்பதிவு செய்து செல்லத்துரை உள்பட 2 பேரையும் கைது செய்தார்.


குண்டர் சட்டம் பாய்ந்தது

அந்த 2 பேரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து, கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன் ஆகியோர் மூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், செல்லத்துரை மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரிக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்று செல்லத்துரையை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சிறை அதிகாரிகளிடம் செல்லத்துரையை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான ஆவணங்களை போலீசார் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கஞ்சா கடத்தல் மற்றும் வாடகைக்கார் மோசடி வழக்கில் 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
கஞ்சா கடத்தல் மற்றும் வாடகைக்கார் மோசடி வழக்கில் 10 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
2. கல்யாணில் ரெயில்வே மேம்பால ராட்சத இரும்பு சட்டம் பொருத்தும் பணி முடிந்தது
கல்யாணில் ரெயில்வே மேம்பாலத்திற்காக 76.67 மீட்டர் நீள ராட்சத இரும்பு சட்டம் பொருத்தும் பணி முடிந்தது.
3. கர்நாடகத்தில் ‘ஆன்லைன் ரம்மி’ விளையாட்டுக்கு தடை விதிக்க புதிய சட்டம்
கர்நாடகத்தில் ‘ஆன்லைன் ரம்மி’ விளையாட்டுக்கு தடை விதிக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
4. சிறுமி பலாத்காரம், மாணவிகள் கடத்தல் வழக்குகளில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சிறுமி பலாத்காரம், மாணவிகள் கடத்தல் வழக்குகளில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாயந்தது.
5. சமூக வலைதளங்களில் குழந்தைகள் ஆபாச படங்களை பதிவேற்றிய கால்நடை ஆய்வாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சமூக வலைதளங்களில் இளம்பெண்களின் ஆபாச படங்களை பகிர்ந்த கால்நடை ஆய்வாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.