பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மகப்பேறு நிதியுதவி கேட்டு தம்பதி தர்ணா
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மகப்பேறு நிதியுதவி கேட்டு தம்பதி தர்ணாவில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா வேள்விமங்கலத்தை சேர்ந்தவர் உதயசூரியன் (வயது 30). இவரும், அவரது மனைவி இளையராணியும் தங்களது 2 பெண் குழந்தைகளுடன் நேற்று மாலை வந்து கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து திடீரென்று தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது உதயசூரியன் கூறுகையில், எனது மனைவிக்கு 2-வது குழந்தை பிறந்ததற்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.2 ஆயிரம் மட்டுமே கிடைத்துள்ளது. மீதி பணம் கிடைக்கவில்லை. அந்த பணம் கிடைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக தர்ணாவில் ஈடுபட்டதாக, கூறினார்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த சுகாதாரத்துறையினர் 2-வது குழந்தை பிறந்த பிறகு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்திருந்தால் மட்டுமே மீதமுள்ள பணம் கிடைக்கும், என்றனர். இதையடுத்து அந்த தம்பதியனர் தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story