அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரை பணிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க. இளைஞர், மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம் 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு


அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரை பணிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க. இளைஞர், மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம் 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 16 Oct 2020 4:17 AM GMT (Updated: 16 Oct 2020 4:17 AM GMT)

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரை பணி நீக்கம் செய்யக்கோரி கிருஷ்ணகிரியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பர்கூர்,

அண்ணா பல்கலைக்கழகத்தை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்வதை கண்டித்தும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் பர்கூர் ஒன்றியம் கந்திகுப்பம் பஸ் நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் ரஜினிசெல்வம் (கிழக்கு), சீனிவாசன் (மேற்கு) ஆகியோர் தலைமை தாங்கினர்.

மாவட்ட மாணவரணி அமைப்பாளர்கள் செந்தில் (கிழக்கு), சேகர் (மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பர்கூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோவிந்தராசன் வரவேற்றார். இதில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், சந்திரன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, பொதுக்குழு உறுப்பினர் ராஜன், ஒன்றிய செயலாளர்கள் சாந்தமூர்த்தி, கோவிந்தன், கோவிந்தசாமி, எக்கூர் செல்வம், சாமிநாதன், சுப்பிரமணி மற்றும் இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் சுந்தர்ராஜன், வேலுமணி, ராமு, கிருஷ்ணன், சவுந்திரபாண்டியன், மகேந்திரன், பிரபு உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

Next Story