நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு
நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகன் மீது போலீசார் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மும்பை,
நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகன் மகாஅக்சய். இவரது மீது பெண் ஒருவர் டெல்லி போலீசில் கற்பழிப்பு புகாரை அளித்து இருந்தார். இதுகுறித்து டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இந்தநிலையில் சம்பவம் குறித்து பெண் கற்பழிக்கப்பட்டதாக கூறப்படும் மும்பை போலீசில் புகார் அளிக்க டெல்லி ஐகோர்ட்டு கடந்தமார்ச் மாதம் உத்தரவிட்டது.
இதைடுத்து அந்த பெண் நடிகரின் மகன் மற்றும் அவரது தாய் மீது மும்பை ஒஷிவாரா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை மகாஅக்சயுடன் உறவில் இருந்தேன். ஒரு நாள் அவரை சந்திக்க அந்தேரி மேற்கு, ஆதார்ஷ் நகரில் உள்ள வீட்டுக்கு சென்றேன். அப்போது அவர் மயக்க மருந்து கொடுத்து என்னை கற்பழித்தார். இதனால் கர்ப்பமான எனக்கு கருத்தடை மாத்திரை கொடுத்து கருவை கலைத்தார். இதையடுத்து திருமணம் செய்து கொள்ளுமாறு மகா அக்சயை வலியுறுத்தினேன். இதனால் எங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் அவரை தொடர்பு கொண்டு பேச நினைத்த போது அவரது தாய் யோகிதா பாலி என்னை போனில் மிரட்டினார்.
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் குறித்து போலீசார் மகாஅக்சய் மற்றும் அவரது தாய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story