நீலாம்பூரில் இன்று 106 அடி உயர கொடிக்கம்பத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியேற்றுகிறார்
கோவையை அடுத்த நீலாம்பூரில் 106 அடி உயர கொடிக்கம்பத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றி வைக்கிறார்.
கருமத்தம்பட்டி,
கோவை புறநகர் தெற்கு மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்துகவுண்டன்புதூர் ஊராட்சியில் சூலூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில் கோவை- அவினாசி எல் அண்ட் டி பைபாஸ் ரோடு நீலாம்பூரில் 106 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது. அ.தி. மு.க.வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி 106அடி நீள கொடிக்கம்பத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியேற்றுகிறார். பின்னர் அவர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதற்கான விழா ஏற்பாடுகள் நேற்று நடைபெற்றது. அதை சூலூர் எம்.எல்.ஏ வி.பி.கந்தசாமி, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் தோப்பு க.அசோகன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஜி.குமரவேல், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், ஒன்றிய சேர்மன் மாதப்பூர் பாலு, தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் சூலூர் லிங்கசாமி ஆகியோர் நடைபெற்று வரும் பணிகளை நேரில் வந்து பார்வையிட்டனர். அவர்கள், பணிகள் குறித்து வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேலிடம் கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினர்.
இது குறித்து வி.பிகந்தசாமி எம்.எல்.ஏ. கூறுகையில், கோவை மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு அயராது பாடுபட்டு வரும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அ.தி.மு.க.வின் கொடியேற்றி வைத்த பிறகு சூலூர் தொகுதி முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் காலனி மக்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு காலனிக்கும் 50 சேர், 5 டேபிள் என சுமார் ரூ.75 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வழங்குகிறார். வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில் வறுமையில் இருப்போர் வாழ்வாதாரம் பெறும் வகையில் 49 பெட்டி கடைகள் வைப்பதற்கான பெட்டிகள் ரூ.15 லட்சம் மதிப்பில் வழங்குவதையும் அமைச்சர் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முன்னோடிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர் என்றார். அப்போது அரசூர் தன்ராஜ், மகளிர் அணி ராதாமணி உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story