மும்பையில் 18 துணை போலீஸ் கமிஷனர்கள் பணி இடமாற்றம்
மும்பையில் 18 போலீஸ் துணை கமிஷனர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை,
மராட்டியத்தில் சமீபத்தில் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிகளவில் பணி இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது மும்பையில் 18 போலீஸ் துணை கமிஷனர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள டி.ஆர்.பி. மோசடி வழக்கை விசாரித்து வரும் குழுவில் இடம்பெற்றுள்ள துணை போலீஸ் கமிஷனர் நந்தகுமார் தாக்குர் போக்குவரத்து பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சொந்த காரணம்
சொந்த காரணங்களுக்காக நந்தகுமார் தாக்குர் கேட்டுக்கொண்டதன் பேரில், அவருக்கு பணி இடமாற்றம் அளிக்கப்பட்டதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
இதேபோல சசிகுமார் மீனா மண்டலம் 1-க்கு மாற்றப்பட்டுள்ளார். இதுதவிர துணை போலீஸ் கமிஷனர்கள் பிரகாஷ் ஜாதவ், தத்தா நலவாடே, விஜய் பாட்டீல், கிருஷ்ணகாந்த் உபாத்யாய், மகேஷ் ரெட்டி உள்ளிட்டவர்களும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Tags :
Next Story