மாவட்ட செய்திகள்

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு உத்தரகாண்ட் ஐகோர்ட்டு நோட்டீஸ் + "||" + Uttarakhand High Court issues notice to Governor Bhagat Singh Koshyari in contempt of court case

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு உத்தரகாண்ட் ஐகோர்ட்டு நோட்டீஸ்

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு உத்தரகாண்ட் ஐகோர்ட்டு நோட்டீஸ்
அரசு பங்களாவுக்கு வாடகை செலுத்தாத கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரகாண்ட் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,

மராட்டிய மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரி ஆவார். எனவே அந்த மாநிலத்தில் அவருக்கு முன்னாள் முதல்-மந்திரி என்ற வகையில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. ஆனால் அவர் பங்களாவுக்கு உரிய வாடகையை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.


இதுதொடர்பான மனுவை விசாரித்த அந்த மாநில கோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் அரசு பங்களாவுக்கு மார்க்கெட் நிலவரத்துக்கு ஏற்ற வாடகையை 6 மாதத்திற்குள் செலுத்த பகத்சிங் கோஷ்யாரிக்கு உத்தரவிட்டது. ஆனால் அவர் கோர்ட்டு உத்தரவின்படி பங்களாவுக்கான வாடகையை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

நோட்டீஸ்

இதையடுத்து உத்தரகாண்ட் ஐகோர்ட்டில் தொண்டு நிறுவனம் ஒன்று பகத்சிங் கோஷ்யாரி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடர்ந்து உள்ளது.

இதை விசாரித்த நீதிபதி சரத்குமார் இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்க கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிட்லப்பாக்கம் ஏரி நிலத்தில் கட்டிடப்பணிகள் மேற்கொள்ள தடை ஐகோர்ட்டு உத்தரவு
சிட்லப்பாக்கம் ஏரி நிலத்தின் கட்டிடப்பணிகளை மேற்கொள்ள சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
2. சாலை விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.17 லட்சம் இழப்பீடு ஐகோர்ட்டு உத்தரவு
சாலை விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீடு நிறுவனத்துக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. தேசத்துரோக வழக்கு பதிவு செய்தது ஏன்? நடிகை கங்கனா ரணாவத்தை கைது செய்ய போலீசாருக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு
நடிகை கங்கனா ரணாவத் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பிய ஐகோர்ட்டு, அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
4. அவதூறு பரப்பிய யூ-டியூப் சேனலிடம் ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகர் அக்சய்குமார் நோட்டீஸ்
ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு பீகாரை சேர்ந்த யூ-டியூப் சேனலுக்கு நடிகர் அக்சய் குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
5. 2-வது தவணை கல்வி கட்டணத்தை வசூலிக்கலாம் தனியார் பள்ளிகளுக்கு ஐகோர்ட்டு அனுமதி
75 சதவீத கல்வி கட்டணத்தில் 2-வது தவணையான 35 சதவீத கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலித்துக்கொள்ள அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.