பள்ளி மாணவியை கடத்தி திருமணம்: தொழிலாளி உள்பட 2 பேருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை - சேலம் கோர்ட்டு தீர்ப்பு


பள்ளி மாணவியை கடத்தி திருமணம்: தொழிலாளி உள்பட 2 பேருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை - சேலம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 21 Oct 2020 6:06 PM IST (Updated: 21 Oct 2020 6:06 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த வழக்கில் கூலித்தொழிலாளி உள்பட 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

சேலம்,

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள மெய்யம்பாளையத்தை அடுத்த தாதாபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் விஜயகுமார் (வயது 22). கூலித்தொழிலாளி. இவர் 17 வயதுடைய பிளஸ்-1 மாணவியை கடந்த 2.4.2018 அன்று கடத்திச்சென்று திருமணம் செய்து உள்ளார். இதற்கு அவரது தாத்தா சின்னபையன் (65) உடந்தையாக இருந்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் எடப்பாடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார், இருவரையும் பிடித்து விசாரித்தனர். இதையடுத்து மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரையும், சின்னபையனையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதன்படி மாணவியை கடத்திச்சென்று திருமணம் செய்ததற்காக விஜயகுமாருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், உடந்தையாக இருந்த அவரது தாத்தா சின்னபையனுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், மேலும் தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு கூறினார்.

Next Story