மாவட்ட செய்திகள்

ராய்ச்சூர் அருகே மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ரசாயன கசிவு; புதுமாப்பிள்ளை சாவு மேலும் 4 பேர் கவலைக்கிடம் + "||" + Chemical leak at a pharmaceutical factory near Raichur; Newcomer's death worries 4 more

ராய்ச்சூர் அருகே மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ரசாயன கசிவு; புதுமாப்பிள்ளை சாவு மேலும் 4 பேர் கவலைக்கிடம்

ராய்ச்சூர் அருகே மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் ரசாயன கசிவு; புதுமாப்பிள்ளை சாவு மேலும் 4 பேர் கவலைக்கிடம்
ராய்ச்சூர் அருகே, மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென ரசாயன கசிவு ஏற்பட்டது. இதில் புதுமாப்பிள்ளை இறந்தார். மேலும் 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ராய்ச்சூர்,

ராய்ச்சூர் புறநகர் வடலூர் கிராஸ் பகுதியில் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ராய்ச்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை ஊழியர்கள், மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


இந்த சந்தர்ப்பத்தில் தொழிற்சாலையில் இருந்து திடீரென ரசாயன கசிவு ஏற்பட்டது. அந்த ரசாயன நெடியை சுவாசித்த ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ஊழியர்கள், தொழிற்சாலையில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இந்த நிலையில் ரசாயன கசிவை சுவாசித்த 5 பேர் தொழிற்சாலைக்குள் மயங்கி விழுந்தனர்.

என்ஜினீயர் சாவு

இதுபற்றி ஊழியர்கள், ராய்ச்சூர் புறநகர் போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்பு படையினரும் தொழிற்சாலைக்குள் மயங்கி விழுந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ராய்ச்சூர் ரிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் தொழிற்சாலையில் வேலை செய்த என்ஜினீயரான லட்சுமணன் (வயது 28) என்பவர் பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து ராய்ச்சூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சுமணனுக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. புதுமாப்பிள்ளை லட்சுமணனின் உடலை பார்த்து அவரது மனைவியும், உறவினர்களும் கதறி அழுதனர். இது காண்போரை கண்கலங்க வைத்தது.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் இருந்து அன்னவாசல் சென்ற தனியார் பஸ்சை இயக்கிய டிரைவர் திடீர் சாவு
திருச்சியில் இருந்து அன்னவாசல் சென்ற தனியார் பஸ்சை இயக்கிய டிரைவர் திடீரென உயிரிழந்ததால் அந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது.
2. வேளாங்கண்ணி அருகே டிராக்டர் மோதி பெண் சாவு
வேளாங்கண்ணி அருகே டிராக்டர் மோதி பெண் சாவு.
3. திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் சாவு
திருவள்ளூர் அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்தடையை சரி செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
4. புதையல் இருப்பதாக தோண்டிய குழியில் சிக்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் சாவு
நாசரேத்தில் புதையல் இருப்பதாக தோண்டிய குழியில் சிக்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
5. அமெரிக்காவில் பயங்கரம் 3 மசாஜ் பார்லர்களில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு; 8 பெண்கள் சாவு
அமெரிக்காவில் 3 மசாஜ் பார்லர்களில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.‌