தஞ்சையில், வீட்டின் ஜன்னலை உடைத்து நகை திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை
தஞ்சையில் வீட்டின் ஜன்னலை உடைத்து நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்,
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள ரகுமான்நகரை சேர்ந்தவர் எர்ணவீரன் (வயது51). சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சிவகாசியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்று விட்டார். பின்னர் 2 நாட்கள் கழித்து வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு பீரோவில் இருந்த 5½ பவுன் நகையை காணவில்லை. வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று நகையை திருடிச்சென்றது தெரிய வந்தது.
இது குறித்து எர்ணவீரன் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story