மாவட்ட செய்திகள்

பேக்கரியின் பெயர் பலகை வைத்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி + "||" + Of the bakery When the name plate is placed The young man was struck by electricity and killed

பேக்கரியின் பெயர் பலகை வைத்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

பேக்கரியின் பெயர் பலகை வைத்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
சங்ககிரி அருகே பேக்கரியின் பெயர் பலகை வைத்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.
சங்ககிரி,

சங்ககிரி அருகே சின்னகவுண்டனூர் பைபாஸ்சில் கேரளாவை சேர்ந்த அப்துல் ஹமீத் (வயது 54) என்பவருக்கு சொந்தமான பேக்கரி செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரியில் நேற்று காலை 8 மணிக்கு ‘சென்னை கேக் ஷாப்’ என்ற பெயர் பலகை வைக்கும் பணி நடந்தது. இந்த பணியில் கொல்லனூர் பகுதியை சேர்ந்த சம்பத் (22), அவருடைய நண்பர் வேலம்மாவலசு ஆசாரி காட்டை சேர்ந்த கார்த்திக் (25), தங்கவேல் (35) ஆகிய 3 பேர் ஈடுபட்டு இருந்தனர்.


அப்போது கடையின் மேல் பகுதியில் சென்ற உயர்அழுத்த மின்சார கம்பி மீது பெயர் பலகை எதிர்பாராதவிதமாக உரசியது. இதனால் இரும்பினால் ஆன அந்த பலகையில் மின்சாரம் பாய்ந்ததுடன், அதனை பிடித்து இருந்த சம்பத், கார்த்திக், தங்கவேல் ஆகியோரை மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சம்பத் பரிதாபமாக உயிரிழந்தார்.

கார்த்திக், தங்கவேல் ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை