மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் ஒரே நாளில் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது + "||" + In the same day in the district 6 people in thuggery law Arrested

மாவட்டத்தில் ஒரே நாளில் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது

மாவட்டத்தில் ஒரே நாளில் 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், நெல்லை தச்சநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த மலையரசன் மகன் மணிகண்டன் (வயது 32), சேரன்மாதேவி மேலக்கூனியூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணி மகன் தங்கச்செல்வன் (26), முறப்பநாடு பக்கப்பட்டி வடக்குத்தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் சின்னத்தம்பி (23), நெல்லை தாழையூத்து கட்டுடையார் குடியிருப்பு நியூகாலனியை சேர்ந்த பெருமாள் மகன் மகாராஜன் (31), பாளையங்கோட்டை கீழநத்தம் வெள்ளக்கோவில் சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகன் சண்முகராஜன் (23), நெல்லை தாழையூத்து கட்டுடையார்குடியிருப்பு மேலபுத்தனேரி காந்திநகரை சேர்ந்த சின்னத்தம்பி என்ற ராசுக்குட்டி (19) ஆகிய 6 பேரும் சாயர்புரம் பகுதியில் உள்ள கடைகளில் வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் ரவுடித்தனம் செய்து, பொதுமக்களையும் அச்சுறுத்தினர்.


இதுகுறித்து தகவல் அறிந்த சாயர்புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இவர்கள் மீது பல மாவட்டங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கொலை மிரட்டல் உள்பட 27 வழக்குகள் உள்ளன.

இதேபோன்று தூத்துக்குடி திரேஸ்புரம் தொம்மையார்கோவில் தெருவைச் சேர்ந்த கிளாஸ்டன் மகன் கிசிங்கர் (28) என்பவரை தூத்துக்குடி வடபாகம் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் தொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து வந்தனர். இதனால் சாயர்புரத்தில் கைது செய்யப்பட்ட மணிகண்டன், தங்கச்செல்வன், சின்னத்தம்பி, மகாராஜன், சின்னத்தம்பி என்ற ராசுக்குட்டி மற்றும் வடபாகம் போலீசார் கைது செய்த கிசிங்கர் ஆகிய 6 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதற்கான உத்தரவுகளை பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர். மாவட்டத்தில் ஒரே நாளில் 6 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.