தி.மு.க. விளம்பர பதாகை மீது அ.தி.மு.க.வினர் பதாகை ஒட்டியதால் பரபரப்பு போலீசாருடன் வாக்குவாதம்


தி.மு.க. விளம்பர பதாகை மீது அ.தி.மு.க.வினர் பதாகை ஒட்டியதால் பரபரப்பு போலீசாருடன் வாக்குவாதம்
x
தினத்தந்தி 25 Oct 2020 4:03 AM GMT (Updated: 25 Oct 2020 4:03 AM GMT)

கரூர் அமராவதி ஆற்றுப்பாலம் அருகே தி.மு.க. விளம்பர பதாகை மீது அ.தி.மு.க.வினர் பதாகை ஒட்டினர். இதையடுத்து போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர், 

கரூர் லைட்ஹவுஸ் அமராவதி ஆற்றுப்பாலம் அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் விளம்பர பதாகைகள் வைப்பதற்கு பிரத்யேகமாக இடம் உள்ளது. இந்த இடத்தில் ஏற்கனவே கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. பிறந்தநாளையொட்டி விளம்பர பதாகை ஒட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று அ.தி.மு.க.வை சேர்ந்த சிலர் ஏற்கனவே தி.மு.க. வைத்திருந்த விளம்பர பதாகை மீது அ.தி.மு.க.வின் விளம்பர பதாகையை ஒட்டியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தி.மு.க. நகர பொறுப்பாளர் ராஜா தலைமையிலான கட்சியினர் அமராவதிபாலத்தில் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாக்குவாதம்

இது குறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, தி.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நாங்கள் முறையாக அனுமதி பெற்று விளம்பர பதாகை வைத்துள்ளோம். அ.தி.மு.க.வினர் எப்படி எங்கள் விளம்பர பதாகை மீது வைக்கலாம் என கேட்டு போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story