திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை


திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 30 Oct 2020 10:00 PM GMT (Updated: 2020-10-31T06:23:46+05:30)

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு (பி.பி.இ.எஸ்.) 3 ஆண்டு படிப்பு, இளநிலை உடற்கல்வியியல் (பி.பி.எட்.) 2 ஆண்டு படிப்பு, முதுநிலை உடற்கல்வியியல் (எம்.பி.எட்) 2 ஆண்டு படிப்பு மற்றும் ஒரு ஆண்டு எம்.பில். பாடப்பிரிவுகளும் உள்ளன. மேலும் ஆராய்ச்சி படிப்பு (பிஎச்.டி.) முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது.

இக்கல்லூரி சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றது. மேலும் தேசிய தர மதிப்பீட்டுக்குழு மறுமதிப்பீட்டில் ‘ஏ’ சான்று வழங்கி உள்ளது.

கல்லூரியில் சர்வதேச தரத்திலான உள்விளையாட்டு அரங்கம், வெளி விளையாட்டுகளுக்கு தேவையான விளையாட்டு மைதானங்கள், தரமான ஓட்டப்பாதை, தரம் வாய்ந்த உடற்கல்வி அறிவியல் ஆய்வகங்கள், தரமிக்க நூலக வசதி, திறமைவாய்ந்த பேராசிரியர் குழு, இருபாலரும் தங்குவதற்கு தனித்தனி விடுதி வசதி உள்ளது.

மேலும் சிறந்த உடற்கல்வியியல் வல்லுனர்களுடன் கலந்தாய்வு நிகழ்ச்சிகள், 100 சதவீத தேர்ச்சி மற்றும் பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு வீரர்கள் தேர்வு, பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பிற்கு தேவையான உதவி செய்து கொடுக்கப்படுகிறது. மேலும் இங்கு பயிலும் மாணவர்களுக்கு என்.இ.டி. மற்றும் எஸ்.இ.டி. தேர்வுகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழக அளவில் மாணவ-மாணவிகள் பதக்கங்களை வென்று வருகின்றனர். கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் 100 சதவீத வேலைவாய்ப்பு சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டு, கல்லூரி நிர்வாகம் வேலைவாய்ப்பை பெற்று தருகிறது.

கல்லூரியில் பி.பி.இ.எஸ். 3 ஆண்டு பட்டப்படிப்பிற்கான மாணவ-மாணவியர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த படிப்பில் சேர பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பள்ளிகளுக்கு இடையேயான ஏதேனும் ஒரு போட்டியில் பங்குபெற்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மாணவ-மாணவியரின் வயது வரம்பு 21-க்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிட மாணவர்களுக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.

பி.பி.எட். 2 ஆண்டு பட்டப்படிப்பில் சேர இளநிலை பட்டப்படிப்புடன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இடையிலான ஏதேனும் ஒரு விளையாட்டு போட்டியில் பங்குபெற்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிட மாணவர்களுக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும். மாணவ-மாணவிகள் பட்டப்படிப்பு படிக்கும்போது, பல்கலைக்கழகம் சார்பில் ஏதேனும் ஒரு விளையாட்டில் (பார்ம்-3) பங்கு பெற்றிருந்தால், அந்த மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் சலுகை வழங்கப்படும்.

எம்.பி.எட். 2 ஆண்டு பட்ட மேற்படிப்பில் சேர இளநிலை உடற்கல்வியியல் (பி.பி.எட்.) பயின்று இருக்க வேண்டும். அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி வேண்டும். மாணவ-மாணவிகள் வயது 35-க்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிட மாணவர்களுக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உண்டு. டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் பி.பி.எட். பயின்றவர்களுக்கு எம்.பி.எட். படிக்க கல்வி கட்டணத்தில் சலுகை வழங்கப்படும்.

எம்.பில். ஒரு ஆண்டு பாடப்பிரிவுகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன. கல்வி தகுதி எம்.பி.எட். அல்லது எம்.பி.இ. மற்றும் அதற்கு இணையான பட்டமேற்படிப்பு பயின்று இருக்க வேண்டும்.

இக்கல்லூரியில் சேர விருப்பம் உள்ளவர்கள் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் tnpsu.edu.in என்ற இணையதளத்தில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியினை தேர்வு செய்து, மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் கல்வி சான்றிதழ்கள், விளையாட்டு சான்றிதழ், மருத்துவ சான்றிதழ் போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு உடற்கல்வியியல் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டிய கடைசி நாள் வருகிற 7-ந்தேதி (சனிக்கிழமை) ஆகும். எம்.பில். படிக்க விரும்புவோர் இந்த கல்லூரியினை தேர்வு செய்து, நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 25-ந்தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி பற்றிய அனைத்து விவரங்கள், பட்டப்படிப்பிற்கான கல்லூரி கட்டணம், கல்லூரி விதிமுறைகள், சிறப்பு அம்சங்கள் ஆகியவை www.drs-a-c-pe.com என்ற கல்லூரியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும் விவரங்களுக்கு திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி அலுவலகத்தை 04639-245110, 220590 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று கல்லூரி முதல்வர் சாம்ராஜ் தெரிவித்துள்ளார்.

Next Story